/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்னல் தாக்கி ஒருவர் பலி; இறுதி ஊர்வலத்தில் பரிதாபம்
/
மின்னல் தாக்கி ஒருவர் பலி; இறுதி ஊர்வலத்தில் பரிதாபம்
மின்னல் தாக்கி ஒருவர் பலி; இறுதி ஊர்வலத்தில் பரிதாபம்
மின்னல் தாக்கி ஒருவர் பலி; இறுதி ஊர்வலத்தில் பரிதாபம்
ADDED : மே 23, 2024 05:30 AM

திட்டக்குடி -: இறுதி ஊர்வலத்தில் சென்றவர் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநத்தம் அடுத்த எழுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் பாரதிதாசன்,33; பைக் மெக்கானிக். இவர் நேற்று மாலை 5:30 மணிக்கு அதே கிராமத்தை சேர்ந்த டேவிட்,40; என்பவரின் இறுதிசடங்கில் பங்கேற்றார்.
இறுதிசடங்கு ஊர்வலம் சுடுகாடு அருகே சென்றபோது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அதனையொட்டி பாரதிதாசன், அருகில் இருந்த புளிய மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் பாரதிதாசன் படுகாயமடைந்தார்.
அவரை, கிராம மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இறுதி ஊர்வலத்தில் சென்றவர், மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.