ADDED : ஏப் 02, 2024 05:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுாரில் 'மலையேற்றம்' என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா நடந்தது.
மீனாட்சி வரவேற்றார். கடலுார் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி முதல்வர் நடராஜன், துரையன் எழுதிய நுாலை வெளியிட, அரசு பெரியார் கலைக் கல்லுாரி பேராசிரியர் பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். நுாலாசிரியர் துரையன் ஏற்புரையாற்றினார். விழாவை பால்கி தொகுத்து வழங்கினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜா, கல்வித்துறைக் கண்காணிப்பாளர் சேதுராமன், மாவட்டத் தமிழ்ச் சங்கம் ரவி, இதயத்துல்லா, மாநகரத் தமிழ்ச்சங்கத் தலைவர் சுதர்சனம், சிவா, எழிலேந்தி பங்கேற்றனர்.

