/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நிர்மலா சீத்தாராமன் சிதம்பரத்தில் இன்று பிரசாரம்
/
நிர்மலா சீத்தாராமன் சிதம்பரத்தில் இன்று பிரசாரம்
ADDED : ஏப் 12, 2024 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சிதம்பரம் நகரில் இன்று பிரசாரம் செய்கிறார்.
சிதம்பரம் தொகுதி பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து, இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதையொட்டி, இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஹெலிபேடு தளத்தில் வந்திறங்குகிறார்.
அங்கிருந்து சிதம்பரம் பஸ் நிலையம் அருகே காந்தி சிலை அருகே, மதியம் 12:30 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில், சிதம்பரம் தொகுதி பா.ஜ., வேட்பாளரை ஆதரித்து, தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு பேசுகிறார்.

