/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., வேட்பாளர் அறிவிக்காததால் நெல்லிக்குப்பம் தி.மு.க., அலுவலகம் வெறிச்

ADDED : மார் 23, 2024 05:57 AM

நெல்லிக்குப்பம் : தி.மு.க., கூட்டணியில் கடலுார் தொகுதியில் காங்., வேட்பாளர் அறிவிக்காததால் நெல்லிக்குப்பம் தி.மு.க.,அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது.கடலூர் தொகுதி தி.மு.க.,கூட்டணியில் காங்., ஒதுக்கப்பட்டது. அதேபோல் அ.தி.மு.க.கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கும்,பா.ஜ., கூட்டணி பா.ம.க.வுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிட்டிங் எம்.பி. தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதால் இந்த முறையும் தி.மு.க. வேட்பாளரே போட்டியிடுவார் என அக்கட்சியினர் நம்பியிருந்தனர்.இதனால் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்திமுடித்திருந்தனர்.
ஆனால் கோஷ்டி பூசல் காரணமாக தொகுதி காங., ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது.இதனால் தி.மு.க.வினர் அதிருப்தியில் உள்ளனர்.தி.மு.க.வேட்பாளர் போட்டியிட்டால் ப வைட்டமின் கிடைக்கும் என நம்பியிருந்தனர்.ஆனால் காங்., ஒதுக்கியும் வேட்பாளர் அறிவிக்காததால் தி.மு.க.அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. நகரில் மற்ற கட்சிகளுக்கு அலுவலகம் கிடையாது.தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அலுவலகம் அமைப்பது வழக்கம்.இதுவரை அவர்களும் பணியை துவக்காததால் தேர்தல் களைகட்டவில்லை.