/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாக்காளர் பட்டியலில் 47 பேரின் பெயர் 'மிஸ்சிங்'
/
வாக்காளர் பட்டியலில் 47 பேரின் பெயர் 'மிஸ்சிங்'
ADDED : ஏப் 20, 2024 05:19 AM
நடுவீரப்பட்டு, : பல்லவராயநத்தம் ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பண்ருட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பல்லவ ராயநத்தம் ஊராட்சியில் வாக்குசாவடி பாகம் எண் 247, 248 உள்ளது.
இந்த பாகம் எண் 247ல் தர்கா தெரு, மாரியம்மன் கோவில் தெரு, 248ல் பல்லவராய நத்தம் ஊர் மற்றும் காலனி மக்கள் ஓட்டுப்போட வந்தனர்.
அப்போது பாகம் எண் 247ல் 765 வாக்காளர்களும், 248ல் 712 வாக்காளர்களும் உள்ளனர்.
இதில் பாகம் எண் 247ல் உள்ள பல்லவராயநத்தம் மாரியம்மன் கோவில் தெரு வை சேர்ந்த வாக்காளர்கள் 47 பேருக்கு வாக்காளர்பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் வாக்குசாவடி அலுவலர்கள்களிடம் முறையிட்டனர்.
ஆனாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்காளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

