/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணல்மேடு பகுதியில் விளையாட்டு மைதானம் நகராட்சி கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை
/
மணல்மேடு பகுதியில் விளையாட்டு மைதானம் நகராட்சி கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை
மணல்மேடு பகுதியில் விளையாட்டு மைதானம் நகராட்சி கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை
மணல்மேடு பகுதியில் விளையாட்டு மைதானம் நகராட்சி கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை
ADDED : மே 25, 2024 01:27 AM

திட்டக்குடி: திட்டக்குடி கூத்தப்பன்குடிகாடு, மணல்மேடு பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க நகராட்சி கவுன்சிலர் சுரேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திட்டக்குடி மணல்மேடு பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன் வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வந்தது. பழமையான கட்டடம் என்பதால், பழுதடைந்த நிலையிலேயே அதிகாரிகள் அதில் பணியாற்றி வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன் பட்டூர் கிராமத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டடம் கட்டப்பட்டு, அலுவலகம் அங்கு மாற்றப்பட்டுவிட்டது. அதன்பின் திட்டக்குடியிலுள்ள கட்டடம் முற்றிலுமாக பயன்பாட்டில் இல்லாமல் பழுதடைந்த இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பழுதடைந்த கட்டடம் என்பதால் சமூகவிரோதிகள் மதுஅருந்துதல், போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இதுகுறித்து நகராட்சி கவுன்சிலர் சுரேந்தர் கூறியதாவது;
திட்டக்குடி நகராட்சியில் வளர்ந்து வரும் பகுதியாக மணல்மேடு உள்ளது. நகராட்சியில் திட்டங்களை செயல்படுத்த இடம் இல்லை என பல திட்டங்களை தட்டி கழிக்கின்றனர்.
ஆனால் மணல்மேடு பகுதியில் நல்ல தண்ணீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதியுடன் உள்ள இடத்தை பயன்படுத்திக்கொள்ள அதிகாரிகள் முன்வராமல் புறக்கணிக்கின்றனர்.
நீர்வழி புறம்போக்கு அருகில் இருப்பதால் கட்டடம் கட்ட தயங்குவதாக தெரிவிக்கின்றனர். வேளாண்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடம் என்பதால், இருக்கும் பழைய கட்டடங்களை இடித்து அகற்றிவிட்டு திட்டக்குடி பகுதிக்கான வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை கட்டி விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள், இடுபொருட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை செய்யலாம். அல்லது திட்டக்குடி பகுதி இளைஞர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்து இளைஞர்கள் நல்வழிப்படுத்தலாம்.
இதனால் திட்டக்குடி நகராட்சி இளைஞர்கள் தவறான பாதையில் செல்வது தடுக்கப்பட்டு எதிர்காலம் சிறப்பான அமைய வழியாக அமையும் என, தெரிவித்தார்.

