/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீப்பிடித்த குப்பையால் வாகன ஓட்டிகள் அவதி
/
தீப்பிடித்த குப்பையால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 02, 2024 12:29 AM

கடலுார் கடலுார் கம்மியம்பேட்டையில் குப்பை குவியலில் ஏற்பட்ட தீ விபத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் நாள்தோறும் 20 முதல் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பை கொட்ட முறையான இடம் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகம் அவதிப்படுகிறது. நகரில் குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்த இடமில்லாததால், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதை தொழிலாளர்கள் தீயிட்டு கொளுத்தி அழிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். கடலுார் கம்மியம்பேட்டை சுடுகாடு பகுதியில் குவியல் குவியலாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
இதனால், அப்பகுதி சாலையை புகை சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
எனவே, சாலையோரத்தில் குப்பைகள் கொட்டுவதையும், அவற்றை தீயிட்டு கொளுத்துவதை தடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

