/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களூர் ஒன்றிய தே.மு.தி.க., சிறுபாக்கத்தில் தீவிர பிரசாரம்
/
மங்களூர் ஒன்றிய தே.மு.தி.க., சிறுபாக்கத்தில் தீவிர பிரசாரம்
மங்களூர் ஒன்றிய தே.மு.தி.க., சிறுபாக்கத்தில் தீவிர பிரசாரம்
மங்களூர் ஒன்றிய தே.மு.தி.க., சிறுபாக்கத்தில் தீவிர பிரசாரம்
ADDED : ஏப் 09, 2024 05:48 AM

சிறுபாக்கம்: சிறுபாக்கம் பகுதிகளில் மங்களூர் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர்.
கடலுார் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மங்களூர் மேற்கு ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் சிறுபாக்கம், அரசங்குடி, அடரி, எஸ்.நரையூர், வடபாதி, சித்தேரி, பனையாந்துார், வள்ளி மதுரம் உள்ளிட்ட பகுதிகளில் முரசு சின்னத்திற்கு ஓட்டளிக்க கோரி பிரசாரம் செய்தனர்.
தே.மு.தி.க., ஒன்றிய செயலர் ராஜமாணிக்கம் தலைமையில், மாவட்ட துணை செயலர் இளவரசன், மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலர் செல்வக்குமார், பொருளாளர் ராஜா, ஒன்றிய துணைச் செயலாளர்கள் முருகேசன், அறிவழகன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், குமரேசன், அவைத் தலைவர் திருமால், மங்களூர் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பாண்டியன், ஊராட்சி செயலர் ராஜவேல் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.