/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டு எண்ணிக்கை தினத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு
/
ஓட்டு எண்ணிக்கை தினத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு
ADDED : ஜூன் 01, 2024 04:03 AM
கடலுார் : லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையையொட்டி மதுபானக் கடைகள் 4ம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி செயல்படும் மதுபான கடைகள் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
லோக்சபா பொதுத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியான மற்றும் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்ய ஓட்டு எண்ணுகை நாளான வரும் 4ம் தேதி (செவ்வாய் கிழமை) முழுவதும் அனைத்து வகை மதுபானங்கள் விற்பனை கூடங்கள், கடைகள் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் முழுமையாக மூட உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசு உத்தரவின்படி மதுபானங்கள் விற்பனை செய்ய அரசால் உரிமம் வழங்கப்பட்டுள்ள மனமகிழ் மன்றங்கள் (எப்.எல்-2) ரூபவ் மதுபானக் கூடங்கள் (எப்.எல்-3) மற்றும் எப்.எல்-6 நீங்கலாக, எப்.எல்-2 முதல் எப்.எல்-11 வரை அனைத்து உரிம தலங்களிலும் மேற்படி நாள் முழுவதும் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி செயல்படும் உரிமதாரர்கள், மதுபான சில்லரை விற்பனைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

