/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராகவேந்திரர் கோவிலில் லட்சார்ச்சனை
/
ராகவேந்திரர் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED : மே 21, 2024 05:17 AM
புவனகிரி: புவனகிரியில் ராகவேந்திரா சாமிகள் அவதார ஸ்தலத்தில் ஏகதின லட்சார்ச்சனை, வரும் 26ம் தேதி நடக்கிறது.
புவனகிரியில் ராகவேந்திரா சாமிகள் அவதார இல்லம், கோவிலாக நிர்மானிக்கப்பட்டு கும்பாபிேஷம் நடத்தியுள்ள நிலையில் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் தினசரி வந்து செல்கின்றனர். இங்கு, வரும் 26ம் ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. அன்று காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம் தோத்திர பாராயணத்துடன் விழா துவங்குகிறது. தொடர்ந்து நிர்மல்ய அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடக்கிறது. காலை 6:00 மணியில் இருந்து 10.00 மணிக்குள் லட்சார்சனை நிகழ்ச்சியும், பகல் 1.10 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8.00 மணிக்கு ரகோத்ஸவம் நிகழ்ச்சி நடக்கிறது.

