/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இடைநிலை ஆசிரியர் பயிற்சி விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
/
இடைநிலை ஆசிரியர் பயிற்சி விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : மே 23, 2024 05:09 AM
கடலுார் : இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலுார் மஞ்சக்குப்பம் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் செய்திக்குறிப்பு;
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிநிறுவனத்தின் கீழ் கடலுார் மஞ்சக்குப்பத்தில் ஆசிரியர்கல்வி பயிற்சி நிறு வனம் இயங்கி வருகிறது. இங்கு 2024-2025ம் ஆண்டிற்கான இரண்டு ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் மே 21ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை http;//scert.tnschools.gov.in என்ற இணையதளத்திலும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.