ADDED : ஆக 21, 2024 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி துவக்க விழா நடந்தது.
மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். அப்போது, பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கையேடு வழங்கினார். பயிற்சி நிலைய முதல்வர் கணேசன் வரவேற்றார்.
பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் இம்தியாஸ், கடலுார் சரக துணைப் பதிவாளர் துரைசாமி வாழ்த்தி பேசினர்.
பயிற்சி நிலைய விரிவுரையாளர்கள் திருநாவுக்கரசு, அன்பரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் தேவி நன்றி கூறினார்.

