/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.பி., எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபிப்பேன் விருத்தாசலத்தில் பா.ம.க., தங்கர்பச்சான் உறுதி
/
எம்.பி., எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபிப்பேன் விருத்தாசலத்தில் பா.ம.க., தங்கர்பச்சான் உறுதி
எம்.பி., எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபிப்பேன் விருத்தாசலத்தில் பா.ம.க., தங்கர்பச்சான் உறுதி
எம்.பி., எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபிப்பேன் விருத்தாசலத்தில் பா.ம.க., தங்கர்பச்சான் உறுதி
ADDED : ஏப் 09, 2024 05:46 AM

விருத்தாசலம்: அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவது வேஸ்ட் என, விருத்தாசலத்தில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பேசினார்.
கடலுார் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், விருத்தாசலம் அடுத்த எருமனுாரில் நேற்று பிரசாரத்தை துவக்கினார். எ.வடக்குப்பம், சின்னவடவாடி, பெரியவடவாடி, விஜயமாநகரம், பவழங்குடி, பூவனுார், மங்கலம்பேட்டை, விசலுார், சிறுவம்பார் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 50 ஆண்டுகளாக தி.மு.க., - அ.தி.மு.க., இரு கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்டு எந்த பயனும் இல்லை.
கடலுார் மாவட்டம், மாநிலத்தில் கடைசியில் உள்ளது. அப்பா, மகன், பேரன் என குடும்பமே அரசியல் பிழைப்பு நடத்தி கொள்ளையடிக்கின்றனர்.
பிரதமர் வேட்பாளர் இல்லாத அ.தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டுகள் வேஸ்ட். அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு வீணடிக்காதீர்கள். ஒரே நேரத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேரை கொன்ற காங்., கட்சி போட்டியிடுகிறது.
எனவே, எனக்கு ஓட்டு போடுங்கள். ஒரு எம்.பி., எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபித்து காட்டுகிறேன். உங்களை நம்பி தனி ஆளாக ஓட்டு கேட்டு வந்துள்ளேன்.
மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட்டு என்னை வெற்றி பெற செய்யுங்கள்' என்றார்.
பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில இளைஞர் சங்க செயலாளர் சுரேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாநில மகளிரணி செயலாளர் சிலம்புசெல்வி, மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜ், ஒன்றிய கவுன்சிலர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் பாக்யராஜ், ஆசைத்தம்பி, மற்றும் பா.ஜ.க., தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், உள்ளாட்சி பிரிவு மேம்பாடு மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், மாநில செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் பரமசிவம் உடனிருந்தனர்.

