/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உலகம் போற்றும் வகையில் தொகுதியை மாற்றுவேன்
/
உலகம் போற்றும் வகையில் தொகுதியை மாற்றுவேன்
ADDED : ஏப் 15, 2024 04:26 AM

சிதம்பரம் : சிதம்பரம் பா.ஜ., வேட்பாளர் கார்த்தியாயினி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குமராட்சி உள்பட பல்வேறு பகுதி கிராமங்களில் தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர், பேசியதாவது; இத்தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக பதவியேற்பார். அப்போது சிதம்பரம் தொகுதியை, உலகமே திரும்பி பார்க்கும் வகையில், மக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைப்பேன்.
மழைக்காலத்தில், சிதம்பரத்தில் ஏற்படும், பெரு வெள்ள பாதிப்புகளால் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கின்றனர். கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கவும், வெள்ள பாதிப்பை தடுக்கவும், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவும் நடவடிக்கை எடுப்பேன்.
சிதம்பரம் தொகுதி மக்களை அயோத்தி குழந்தை ராமர் கோவில், கிருஷ்ணர் பிறந்த ஜென்ம பூமியான, மதுரா நகரத்திற்கும், உலக அதிசயமான தாஜ்மஹாலுக்கு அழைத்து செல்வேன். சென்ட் தொழிற்சாலை அமைப்பேன்.
எனக்கு தாமரை சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும். தற்போதுள்ள எம்.பி., தொகுதிக்கு எதையும் செய்யவில்லை. வளர்ச்சி இல்லாத சிதம்பரம் தொகுதியை வளர்ச்சி பாதைக்கு மாற்ற பணியாற்றுவேன்' என்றார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் மருதை, தொகுதி பொறுப்பாளர் பாலசுப்ரமணியன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அருள், மாவட்ட துணை தலைவர் கோபிநாத் கணேசன், இளைஞரணி தலைவர் சதீஷ்குமார், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு, பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வமகேஷ், நகர செயலாளர்கள் ராஜவேல், திலீப் குமார், த.மா.கா., மாநில துணைத் தலைவர் வக்கீல் வேல்முருகன், நகரத் தலைவர் ரஜினிகாந்த், அ.மு.மு.க., நகர செயலாளர் மணி, புதிய நீதி கட்சி பொறுப்பாளர் நரசிம்மன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

