/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிற்கு வலியுறுத்தல் கடலுார் நகராட்சியில் மனித சங்கிலி

ADDED : ஏப் 06, 2024 06:03 AM

கடலுார், : லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி கடலுார் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் மக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பெண்களிடையே கோலப்போட்டி, வாகனத்தில் பலுான்கள் பறக்க விடுதல், கலை நிகழ்ச்சி, மூத்த குடிமக்களுக்கு தாம்பூலம் வைத்து அழைத்தல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன.
நேற்று மாநகராட்சி சார்பில் மனித சங்கிலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கடலுார் பாரதி சாலையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி கமிஷ்னர் காந்தி ராஜ் தலைமை தாங்கினார்.
மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி முன்னிலை வகித்தார். கலெக்டர் அருண் தம்புராஜ் சிறப்பு விருந்தினராக மனித சங்கிலியில் பங்கேற்றார். பின்னர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பழனி, நகர் நல அலுவலர் எழில்மதனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.