/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொலை செய்யப்பட்டவரின் கிராபிக்ஸ் படம் வெளியீடு
/
கொலை செய்யப்பட்டவரின் கிராபிக்ஸ் படம் வெளியீடு
ADDED : மார் 28, 2024 04:31 AM

திண்டிவனம் : திண்டிவனம் அருகே எரித்து கொலை செய்யப்பட்டவரின் 'கிராபிக்ஸ்' படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
திண்டிவனம் அடுத்த ஓங்கூர் அருகே உள்ள கரிக்கம்பட்டு கிராம ஏரிப்பகுதியில் கடந்த 17ம் தேதி, 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
ஒரு வாரத்திற்கு மேலாகியும் இறந்தவர் யார் என கண்டுபிடிக்க முடியாததால், குற்றவாளிகளை பிடிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் எஸ்.பி., உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு போலீசார், எரிந்து கிடந்தவரின் முகத்தை வைத்து 'கிராபிக்ஸ்' மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். படத்தில் உள்ளவர் பற்றிய விபரம் தெரிந்தவர்கள் 94981 53644, 94981 52864 ஆகிய மொபைல் எண்களில் தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

