/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களின் பிரச்னை அறிந்தவன் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பேச்சு
/
மக்களின் பிரச்னை அறிந்தவன் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பேச்சு
மக்களின் பிரச்னை அறிந்தவன் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பேச்சு
மக்களின் பிரச்னை அறிந்தவன் எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பேச்சு
ADDED : ஏப் 13, 2024 05:22 AM

பண்ருட்டி; 'கடலுார் மண் மக்களின் பிரச்னை அறிந்த எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்' என பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பேசினார்.
கடலுார் லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிடும் அவர் நேற்று, நெய்வேலி தொகுதியில் பனிக்கன்குப்பம், புதுப்பிள்ளையார்குப்பம், ஆண்டிக்குப்பம், நடுபிள்ளையார்குப்பம், பழைய பிள்ளையார்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு கீழிருப்பு, பெரிய காட்டுப்பாளையம், நடுமேட்டுக்குப்பம் உட்பட பல்வேறு கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:
கடலுார் மாவட்டம், கடந்த 40 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. தமிழகத்தை ஆண்ட இரு கட்சிகளும் இலவசம் வழங்கி ஏமாற்றி வருகின்றனர். பா.ம.க., மட்டும் தான் மக்கள் பிரச்னையை கையிலெடுத்து செயல்படுகிறது.
முந்திரிக்கு போதிய விலையில்லை. பலாப்பழம் பதப்படுத்தி தொழில்நுட்ப மூலம் பலா விவசாயிகள் வருவாய் பெருக நடவடிக்கை எடுப்பேன். ஆரணியில் இருந்து இங்கு ஏன் காங்., வேட்பாளர் வந்து போட்டியிடுகிறார். மற்றொரு வேட்பாளர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது கூட மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.
கடலுார் மண் மக்களின் பிரச்னை அறிந்தவன். இப்பகுதி மக்களின் உரிமை குரலாக ஒலிப்பேன். எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள்.
இவ்வாறு தங்கர்பச்சான் பேசினார்.
பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெகன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், சேகர், முன்னாள் கிழக்கு சிறப்பு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சேகர், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செல்வகுமார், எழில்செல்வம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் சிவகுரு, சிவக்குமார், தங்கவேல், கோதண்டராமன், பா.ஜ., - த.மா.க., - அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

