/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புறவழிச்சாலையில் குவிக்கப்படும் கழிவுகள் விருதையில் தொடரும் அவலம்
/
புறவழிச்சாலையில் குவிக்கப்படும் கழிவுகள் விருதையில் தொடரும் அவலம்
புறவழிச்சாலையில் குவிக்கப்படும் கழிவுகள் விருதையில் தொடரும் அவலம்
புறவழிச்சாலையில் குவிக்கப்படும் கழிவுகள் விருதையில் தொடரும் அவலம்
ADDED : மே 15, 2024 07:33 AM

விருத்தாசலம் நகரில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில், கடலுார் - சேலம் மார்க்கமாகவும், கடலுார் - உளுந்துார்பேட்டை மார்க்கமாகவும் புறவழிச்சாலைகள் போடப்பட்டன. இவ்வழியாக வாகனங்கள் செல்வதை காட்டிலும் குப்பைகள் கொட்டவே அதிகளவு பயன்படுகின்றன.
புறவழிச்சாலையோரம் இறைச்சி, கட்டட கழிவுகள், பயன்படுத்தப்பட்ட துணிகள், மருத்துவ கழிவகள் வீசப்படுகின்றன. இவற்றில் நாய், பன்றிகள் உலவுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் சுகாதார சீர்கேடாக மாறியுள்ளது.
அதுபோல், இறந்த பன்றி, நாய், எலிகளை திறந்தவெளியில் வீசிச் செல்வதால் பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, விருத்தாசலம் புறவழிச்சாலைகளில் குவிந்து கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.