/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சரின் காரில் பறக்கும் படையினர் சோதனை
/
அமைச்சரின் காரில் பறக்கும் படையினர் சோதனை
ADDED : ஏப் 04, 2024 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் காரை நிறுத்தி, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் பைபாஸ் சாலையில். நேற்று காலை தேர்தல் பறக்கும் படை அலுவலர் தமிழ்செல்வி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பா.ம.க., கொடி கட்டி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடியை அகற்றினர்.
அதனை தொடர்ந்து சில நிமிடங்களில் அந்த வழியாக, வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் வந்தார். அவரது காரையும் நிறுத்தி, போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்பு அமைச்சர் புறப்பட்டு சென்றார்.

