/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை கரும்புக்கு மானியம் அறிவிப்பு
/
ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை கரும்புக்கு மானியம் அறிவிப்பு
ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை கரும்புக்கு மானியம் அறிவிப்பு
ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை கரும்புக்கு மானியம் அறிவிப்பு
ADDED : மார் 28, 2024 04:22 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலை சார்பில், கரும்பு நடவுக்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கரும்பு விவசாயிகளின் சிரமங்களை போக்க, கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மான்யம் வழங்கும் திட்டம், கடந்த பிப்ரவரி வரையில் செயல்படுத்தப்பட்டது. கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, கோ 86032, பிஐ 001110, கோ 11015 ரக கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாயும், 2003 வி 46 ரக கரும்புக்கு 8 ஆயிரம் நடவு செய்த 60 நாட்களுக்கு பிறகு வழங்கப்படும். ஏக்கருக்கு 25 டன்னுக்கு கூடுதலாக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு மட்டும் இத்திட்டம் பொருந்தும்.
மேலும் முந்திரி, கொய்யா தவிர்த்து கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு 7 ஆயிரம் ரூபாயும், வாழை, செங்கல் சூளை, சவுக்கு பயிருக்கு பிறகு கரும்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படும். சொட்டுநீர் பாசனம் அமைக்க 5 ஆயிரம், ஆழ உழவுக்கு 2 ஆயிரம், மண் வளத்தை மேம்படுத்த மான்யம் வழங்கப்படும். இச்சலுகைகள் வரும் ஜூன் வரை பொருந்தும். மேலும், கரும்புக்கு 2024-25ம் ஆண்டிற்கு நடப்பு ஆண்டை விட 231 ரூபாய் கூடுதலாக டன்னுக்கு 3,151 ரூபாய் வழங்கப்படும். இதுதவிர தமிழக அரசின் ஊக்க தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. இச்சலுகைகளை பயன்படுத்தி அதிக பரப்பில் கரும்பு நடவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

