/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் களமிறங்கிய தி.மு.க., நிர்வாகிகள் தேர்தல் நெருங்குவதால்...

ADDED : செப் 18, 2024 05:56 AM
தமிழகத்தில், விரைவில் உள்ளாட்சி தேர்தல், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வர உள்ளது. மேலும், நடிகர் விஜய் புதியதாக கட்சியை துவக்கி, மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதனால், ஆளுங்கட்சியான தி.மு.க., தலைமை கட்சியை பலப்படுத்தவும், அனைத்து இடங்களிலும் வெற்றிப்பெறவும் முக்கிய நிர்வாகிகளை கட்சி பணிகளில் தீவிர காட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., வில், மாவட்ட பொறுப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தற்போது ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் 5 பேர் கொண்ட நிர்வாகிகளிடம் சென்று, இளைஞரணி மற்றும் மகளிரணி புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் தி.மு.க., கட்சி கொடியேற்ற வேண்டும். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், சிதம்பரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., நிர்வாகிகள் தற்போது கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.