ADDED : ஏப் 26, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
பண்ருட்டி நகராட்சி சார்பில் நான்கு முனை சந்திப்பில் குடிநீர் தொட்டியை நேற்று முன்தினம் கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, வி.எஸ்.பி., நகரில் காலை உணவு திட்ட கட்டட பணி, தேவராஜ் நகரில் பசுமை உரக்கிடங்கு, கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள குப்பைகள் தரம் பிரித்தல், அரசு மருத்துவமனையில் 5 கோடியில் கட்டடம் கட்டும் பணி துவங்க உள்ள இடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது நகராட்சி கமிஷனர் பிரித்தா, பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன், சுகாதார அலுவலர் முருகேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

