/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'டப்பு' வந்தாச்சு... வேலைய துவங்கியாச்சு...
/
'டப்பு' வந்தாச்சு... வேலைய துவங்கியாச்சு...
ADDED : ஏப் 01, 2024 05:22 AM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் வார்டு நிர்வாகிகள் வரை வந்து ரே வேண்டிய 'டப்பு' முறையாக வந்ததால் தி.மு.க.,வினர் உற்சாகத்துடன் தேர்தல் பணியை துவங்கி விட்டனர்.
கடலுார் தொகுதி, தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியில் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதமானதால், நெல்லிக்குப்பம் தி.மு.க., வினர் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.
மேலும், காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் 'அப்செட்' ஆகியிருந்தனர். அதுமட்டுமின்றி மாற்று கட்சியைச் சேர்ந்தவருக்கு யார் செலவு செய்வது வெற்றிபெற வைப்பது என்ற குழப்பத்தில் தி.மு.க.,வினர் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டினர். இதனால், கட்சி அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில், காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு, நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அன்றே வார்டு நிர்வாகிகள் வரை வந்து சேர வேண்டிய 'டப்பு' வந்து முறையாக கவனிக்கப்பட்டனர்.
இதனால், தி.மு.க.,வினர் உற்சாகமாக தேர்தல் பணியை துவக்கினர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கவனிப்பு இன்னும் பலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், தேர்தல் பணியில் கூடுதல் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

