/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் உறுதி
/
என்.எல்.சி.,யில் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் உறுதி
என்.எல்.சி.,யில் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் உறுதி
என்.எல்.சி.,யில் மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் உறுதி
ADDED : ஏப் 11, 2024 04:34 AM

விருத்தாசலம்: 'என்.எல்.சி., நிறுவன வேலை வாய்ப்பில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என, காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் உறுதியளித்தார்.
கடலுார் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் பெரியவடவாடியில், அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, கை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.
அப்போது, விஷ்ணு பிரசாத் பேசுகையில், 'நாடு முழுவதும் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். சிலிண்டர் எரிவாயு 500 ரூபாய்க்கும், பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாய்க்கு கிடைக்கும்.
நுாறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி, 400 ரூபாயாக ஊதியம் வழங்கப்படும். மக்கள் விரோத பா.ஜ., ஆட்சியை அகற்றி, காங்., தலைமையில் ஆட்சியமைய கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.
'என்.எல்.சி., நிறுவன வேலை வாய்ப்பில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்' என்றார்.
தொடர்ந்து விஜயமாநகரம், கோ.பூவனுார், பள்ளிபட்டு, சிறுவம்பார், எருமனுார் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைச்சர் கணேசன் பிரசாரம் செய்தார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, துணை செயலாளர்கள் தர்மமணிவேல், கோவிந்தராஜ், அன்பழகி ராஜேந்திரன், பொருளாளர் கோவிந்தசாமி, ஒன்றிய அவைத் தலைவர் சிவசங்கரன், மாவட்ட பிரதிநிதிகள், விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திருஞானம், சண்முகம், பாலபாரதி, தகவல் தொழில்நுட்ப அணி சவுந்தரராஜன், ஊராட்சித் தலைவர்கள் குணசேகரன், மணிமேகலை விஷ்ணு, ஒன்றிய கவுன்சிலர்கள் பரமகுரு, சாந்தி மற்றும் வி.சி., மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், மண்டல செயலாளர் ராஜ்குமார், ஊராட்சி துணைத் தலைவர் தென்றல் உடனிருந்தனர்.

