/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐ.டி., கம்பெனி ஊழியர் தற்கொலை பெண்ணாடம் அருகே பரபரப்பு
/
ஐ.டி., கம்பெனி ஊழியர் தற்கொலை பெண்ணாடம் அருகே பரபரப்பு
ஐ.டி., கம்பெனி ஊழியர் தற்கொலை பெண்ணாடம் அருகே பரபரப்பு
ஐ.டி., கம்பெனி ஊழியர் தற்கொலை பெண்ணாடம் அருகே பரபரப்பு
ADDED : ஏப் 11, 2024 03:36 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே காப்புக்காட்டில் ஐ.டி., கம்பெனி ஊழியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காட்டில் நேற்று மாலை 3:30 மணியளவில் விருத்தாசலம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, வனப்பகுதியில் துாக்கில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தொங்கியது. உடல் சிதைந்த நிலையில் இருந்தது. அருகில் லேப்டாப் பேக் மற்றும் உடைந்த நிலையில் மொபைல் போன் கிடந்தது.
தகவலறிந்து வந்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்தனர்.
அதில் இறந்தவர், அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன், 35, என தெரியவந்தது. சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்துள்ளார்.
கடந்த மாதம் சொந்த ஊர் செல்வதாக கூறி, சென்னையில் இருந்து புறப்பட்டவர் வீட்டிற்கு செல்லவில்லை.
சந்தேகமடைந்த இவரது சகோதரர், சென்னை, வேளச்சேரி போலீசில் கடந்த மாதம் 9ம் தேதி புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிந்து தேடி வந்தது தெரிந்தது.
மணிகண்டன் இறப்பதற்கு முன், தனது மொபைலில் இருந்து நண்பர் ஒருவருக்கு 'நான் சாகப் போகிறேன்; யாரும் என்னை தேடவேண்டாம்' என வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்

