/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
/
ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
ADDED : ஏப் 08, 2024 05:57 AM

கடலுார்: தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லுாரியில் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் லோக்சபா பொதுத் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. கடலுார் தொகுதியில் காங்., தே.மு.தி.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடலுார் லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதியில் 1,509 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பயன்படுத்துவதற்காக பேனல் யூனிட், விவி பேட் என 7,081 ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டுப்பதிவிற்கு , பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஓட்டு எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லுாரியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகுாப்புடன் வைக்கப்படவுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. இதனை தேர்தல் நடத்தும் அதிகாரி கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு அறையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையின் முன்பு கண்காணிப்பு கேமிராக்கல், ஓட்டு எண்ணும் அறையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு வலை தடுப்பு போன்றவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடந்துவரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் போலீஸ் பாதுகாப்பு குறித்து கூடுதல் எஸ்.பி., அசோக்குமாரிடம் ஆலோசித்தார். தொடர்ந்து நடந்துவரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அப்போது டி.ஆர்.ஓ., ராஜசேகரன் மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அலுவலர்கள் இருந்தனர்.

