/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.சி., நிர்வாகி தாக்கு 3 பேர் மீது வழக்கு
/
வி.சி., நிர்வாகி தாக்கு 3 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 09, 2024 11:18 PM
சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அருகே வி.சி., கட்சி ஒன்றிய துணை செயலாளரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த சி.சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் பாபு, 40; வி.சி., கட்சி கீரப்பாளையம் ஒன்றிய துணை செயலாளர். இவர், நேற்று முன்தினம் இரவு 7:15 மணியளவில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார்.
அந்த வழியாக வந்த வி.சி., கட்சி ஒன்றிய செயலாளர் சாரதி, ஏன் தேர்தலை வேலை செய்ய வில்லை என, கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, சாரதி அவ ரது ஆதரவாளர் ரவி, திவாகர் ஆகியோர், பாபுவை கட்டையால் தாக்கினர்.
காயமடைந்த பாபு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாபு கொடுத்த புகாரில், ஒரத்துார் போலீசார் வழக்குப்பதிந்து சாரதி, ரவி, திவாகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

