/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்குவரத்துவிதி மீறல் கடலுாரில் 112 பேர் மீது வழக்கு
/
போக்குவரத்துவிதி மீறல் கடலுாரில் 112 பேர் மீது வழக்கு
போக்குவரத்துவிதி மீறல் கடலுாரில் 112 பேர் மீது வழக்கு
போக்குவரத்துவிதி மீறல் கடலுாரில் 112 பேர் மீது வழக்கு
ADDED : மே 27, 2024 05:46 AM
கடலுார்: கடலுார் மாநகராட்சியில் போக்குவரத்து விதிமுறை மீறிய வாகன ஓட்டிகள் 112 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்துள்ளனர்.
கடலுார் மாநகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் உழவர் சந்தை, திருப்பாதிரிப்புலியூர் நாகம்மா கோவில், பீச் சாலை ஆகிய இடங்களில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவர், அதிவேகமாக வாகனம் ஓட்டிய ஒருவர், ெஹல்மெட் அணியாமல் சென்ற 38 பேர், ெஹல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற 34 பேர், இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் சென்ற 21 பேர், போக்குவரத்து விதிமுறை மீறி எதிர் திசையில் வாகனம் ஓட்டிய 17 பேர் என மொத்தம் 112 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அபராதம் விதித்தனர்.