/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முக்கிய புள்ளிகள் சந்திப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
/
முக்கிய புள்ளிகள் சந்திப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
முக்கிய புள்ளிகள் சந்திப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
முக்கிய புள்ளிகள் சந்திப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
ADDED : மார் 28, 2024 04:19 AM
விருத்தாசலம் : கடலுார் வேட்பாளர்கள், முக்கிய புள்ளிகள், தொழிலதிபர்களை சந்திக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடலுாரில் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான், தே.மு.தி.க., சிவக்கொழுந்து, காங்., டாக்டர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க., - அ.தி.மு.க., - தி.மு.க., என மும்முனைப் போட்டி சூடு பிடித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், கடலுார் உட்பட ஆறு சட்டசபை தொகுதிகளில் உள்ள அந்தந்த கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளில் உள்ள மூத்த நிர்வாகிகள், முக்கிய புள்ளிகளை வேட்பாளர்கள் சந்தித்து வருகின்றனர்.
அப்போது, கூட்டணி கட்சிகளின் ஓட்டுகள், சாதக பாதகங்கள், பிரதான கோரிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்பு குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
இதனை, பிரசாரத்தின்போது, வாக்குறுதியாக தெரிவித்து, வாக்காளர்களின் நன்மதிப்பை பெற பட்டியல் தயாராகிறது.
மேலும், மாவட்டத்தில் உள்ள தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்களை சந்தித்து, அவர்களிடம் ஆதரவு திரட்டப்படுகிறது.
மும்முனைப் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என வேட்பாளர்களுடன், அந்தந்த கட்சி நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

