ADDED : ஆக 10, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகரில், தினமலர் செய்தி எதிரொலியால் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் காந்தி நகர் இரண்டாவது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. பணியை எடுத்த ஒப்பந்ததாரர், பள்ளம் தோண்டி 10 நாட்களுக்கு மேல் ஆகியும் பணியை துவக்கவில்லை.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது.
அதையடுத்து, சேர்மன் ஜெயந்தி, கமிஷனர் கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில் கால்வாய் அமைக்கும் பணி துவக்கியுள்ளது.

