/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் தண்ணீர் பந்தல் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
/
புவனகிரியில் தண்ணீர் பந்தல் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
புவனகிரியில் தண்ணீர் பந்தல் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
புவனகிரியில் தண்ணீர் பந்தல் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
ADDED : ஏப் 20, 2024 06:18 AM

புவனகிரி, : புவனகிரி பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறந்தும் தொடராமல் கலெக்டர் உத்தரவை மதிக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
கோடைகாலத் துவங்கியதும் அ.தி.மு.க,. சார்பில் ஆண்டுதோறும் புவனகிரி பாலக்கரை அருகில் தண்ணீர் பந்தல் திறப்பது வழக்கம். இதனால் பஸ்சுக்கு காத்திருப்பவர்கள் உள்ளிட்ட பலரும் பயன்பெற்றனர்.
தற்போது லோக்சபை தேர்தல் காரணத்தால், அரசியல் கட்சியான அ.தி.மு.க., தண்ணீர் பந்தல் அமைக்க வில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் எதிரொலியாக கலெக்டர் அருண்தம்புராஜ் பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன் பின் பேரூராட்சி நிர்வாகம் பங்களா, பொதுப்பணித்துறை அலுவலகம், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதியில், தண்ணீர் பந்தல் அமைப்பதற்காக கீற்றினால் பந்தல் அமைத்து தண்ணீர் வழங்கினர்.
தற்போது பணி ஓய்வு நிலையில் உள்ள செயல் அலுவலர் மற்றொரு பேரூராட்சியில் கூடுதல் பொறுப்பில் உள்ள நிலையில், புவனகிரியில் பேரூராட்சிக்கு தொடர்ந்து வர முடியாத நிலையில் உள்ளார். அங்குள்ள பணியாளர்கள் ஈகோ பிரச்னையால் அதிகாரி உத்தரவை பின் பற்றாமல் கடமைக்கு வந்து செல்கின்றனர். இதனால் தண்ணீர் பந்தல் செயல்படுத்தாமல் கலெக்டர் உத்தரவை தொடராமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சட்டி வருகின்றனர்.

