/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் விழிப்புணர்வு ரங்கோலி
/
விருத்தாசலத்தில் விழிப்புணர்வு ரங்கோலி
ADDED : ஏப் 02, 2024 05:13 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., கல்வி நிறுவனங்கள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலிப் போட்டி நடந்தது.
கல்வி நிறுவன இயக்குனர் ரஞ்சித் தலைமை தாங்கினார். வி.ஏ.ஓ.,க்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். அதில், ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள், நர்சிங் உள்ளிட்ட பிரிவுகளில் படிக்கும் மாணவிகள் இணைந்து ரங்கோலி வகை கோலங்களை போட்டனர்.
தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தன் சிறந்த கோலங்களை தேர்வு செய்து பரிசு வழங்கினார். அதில், தேர்தலில் ஓட்டு போடுவதன் அவசியம், ஓட்டுகள் விற்பனை அல்ல, ஜனநாயக உரிமை உள்ளிட்ட ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்த தலைப்புகளில் கோலங்கள் போடப்பட்டிருந்தன.
கல்லுாரிகளின் முதல்வர்கள், விரிவுரையாளர்கள் உடனிருந்தனர்.

