/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோ.மாவிடந்தல் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கோ.மாவிடந்தல் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 23, 2024 11:48 PM

விருத்தாசலம், : கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் துவக்கப் பள்ளியில், வேளாண் மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருவண்ணாமலை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் பகுதியில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை பார்வையிட்டனர்.
தலைமை ஆசிரியர் ஆரோக்கியமேரி வரவேற்றார். அப்போது, பள்ளி நிர்வாகம், செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்களிடம் அறிவோம் அறி வாய் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
அதில், புத்தகம் வாசிப்பதால் கிடைக்கும் நன்மைகள், ஆரோக்கிய உணவு, சிறுதானியங்களின் பயன்கள், கோடை விடுமுறையை எவ்வாறு செலவழிப்பது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

