ADDED : மார் 27, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக்கழக உயிர்வேதியியல் மற்றும் உயிர்தொழில்நுட்ப துறையில் 1997---1999ம் ஆண்டு முதுகலை அறிவியல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது,
அமெரிக்காவின் ருட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முன்னாள் மாணவர் செங்குட்டுவேலன், திருநாவுக்கரசு, பிரபாஷீலா, புவனேஸ்வரி, நாகலட்சுமி, கிருத்திகா பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில் 'ஸ்மார்ட் இன்ட்ராக்ட்டிவ் பேனல்' வழங்கப்பட்டது. பல்கலை., துணைவேந்தர் கதிரேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அறிவியல் புலமுதல்வர் ராக்கப்பன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன், துறைத்தலைவர் மனோகரன், ராஜேந்திரபிரசாத் ஒருங்கிணைத்தனர்.

