/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுமன்னார்கோவில் பகுதியில் அ.தி.மு.க.,வினர் பிரசாரம்
/
காட்டுமன்னார்கோவில் பகுதியில் அ.தி.மு.க.,வினர் பிரசாரம்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் அ.தி.மு.க.,வினர் பிரசாரம்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் அ.தி.மு.க.,வினர் பிரசாரம்
ADDED : ஏப் 13, 2024 05:23 AM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி ஒன்றிய பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு ஆதரவாக அக்கட்சியினர், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் (தனி) லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தேர்தல் பொறுப்பாளர், அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில ஓட்டு சேகரித்தனர்.
குமராட்சி மேற்கு ஒன்றியம், கிழக்கு ஒன்றியம், மற்றும் காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட முட்டம், குஞ்சமேடு, கருப்பேரி, ஆழங்காத்தான், கந்தகுமாரன், ராயநல்லுார், கொள்ளுமேடு, மானியம் ஆடூர் உட்பட 38 ஊராட்சிகளில் ஓட்டு சேகரித்தனர்.
குமராட்சி மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் செல்வம், ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தராஜ், பேரவைச் செயலாளர் இளஞ்செழியன், நிர்வாகிகள், செந்தில்குமார், பிரபு அசோகன், கிருபா சங்கர், பழனிசாமி, பாரதிதாசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஐ.டி., விங் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

