/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் ஒன்றும் செய்யவில்லை அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் முருகுமாறன் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 07, 2024 05:19 AM

சிதம்பரம் : சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, அமைப்பு செயலாளரும், சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான செம்மலை, பாண்டியன் எம்.எல்.ஏ., மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர், காட்டுமன்னார்கோவிலில், மாமங்கலம், கொண்டசமுத்திரம், வானமாதேவி, சித்தமல்லி, அகர புத்தூர், பழஞ்சநல்லூர் நாட்டார்மங்கலம், முட்டம், மோவூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிசாரம் செய்தனர்.
அப்போது, முருகுமாறன் பேசியதாவது:
தமிழகத்தில் 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சி சிறப்பாக இருந்தது. பழனிச்சாமி ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்தது. தற்போது தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இத்தொகுதி எம்.பி., திருமாவளவன், சிதம்பரம் தொகுதிக்கு சொல்லும்படியாக எதையுமே செய்யவில்லை.
காட்டுமன்னார்கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை, விபசாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கிறது. 24 மணி நேரமும் மதுபானம் விற்கிறது. மது பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதலாக சேர்த்து விற்பனை செய்கின்றனர். அதன் மூலம், தமிழக முழுவதும் நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் லஞ்ச பணம் கிடைக்கிறது. மாதம் 30 கோடியும், ஆண்டுக்கு 360 கோடி ரூபாய் வருகிறது.
சென்னையில் போதைப் பொருள் கடத்திய வழக்கில் தி.மு.க., பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார் இந்த போதை பொருட்கள் விற்பனையால் 5000 கோடி ரூபாய் பணம் சம்பாதித்துள்ளார். இந்த பணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் , அமைச்சர் உதயநிதி அவரது மருமகன் சபரீசன் ஆகியோருக்கு சென்றுள்ளது. தி.முக.., ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவகுமார் , நிர்வாகிகள் ஜான் போஸ்கோ, பாலகிருஷ்ணன் பாலச்சந்தர், அசோகன், வனிதா ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.