/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் 40 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுத்தர வேண்டும் அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் கட்டளை

ADDED : ஏப் 05, 2024 05:07 AM

பண்ருட்டி: 'பண்ருட்டி தொகுதியில் மட்டும் தே.மு.தி.க., வேட்பாளருக்கு 40 ஆயிரம் ஒட்டுகள் கூடுதலாக பெற்றுத்தர வேண்டும்' என முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.
அ.தி.மு.க., கூட்டணி சார்பில் கடலுார் லோக்சபா தேர்தல் குறித்து பண்ருட்டியில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், தே.மு.தி.க., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், அ.தி.மு.க., ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் கனகராஜ், அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, நாகபூஷணம், சிவா, நகர செயலாளர் முருகன், துணைச் செயலாளர் மோகன், நெல்லிக்குப்பம் காசிநாதன், நகர இளைஞரணி ஸ்ரீதர், தே.மு.தி.க., நகர செயலாளர் சேகர், பாக்கியராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில், 'கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., 4000 ஒட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு காரணம் யார் என்று உங்களுக்கு தெரியும். தி.மு.க., அரசு கடந்த 3 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை.
அமைச்சர் உதயநிதி தரம் தாழ்ந்து பேசுகிறார். இது ஆணவபேச்சு. ஆரணி மக்களுக்கு எதுவும் செய்யாமல் கடலுார் வந்து காங்., வேட்பாளர் போட்டியிடுகிறார்.
அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். நமது கூட்டணி கட்சி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து பண்ருட்டி தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் ஒட்டுகள் கூடுதலாக பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சம்பத் பேசினார்.