/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிர பிரசாரம்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிர பிரசாரம்
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிர பிரசாரம்
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிர பிரசாரம்
ADDED : மார் 31, 2024 05:02 AM

சிதம்பரம், : சிதம்பரம் அ.தி.மு.க, வேட்பாளர் சந்திரகாசன், ஜெயகொண்டம் பகுதியில், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி. மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்தது. அரியலூர் மாவட்ட அவைத்தலைவர் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், அமைப்பு செயலாளருமான செம்மலை, அமைப்பு செயலாளர் முருகுமாறன், வரகூர் அருணாச்சலம், அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன், பெரம்பலுார் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்செல்வன், எம்.எல்.ஏ., மீனவர் பிரிவு இணைச்செயலாளர், முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் அமைச்சர் தாமோதரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்று வேட்பாளர் சந்திரகாசனை அறிமுகம் செய்து வைத்து பேசினர்.
நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் சிவசுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள், ராமஜெயவேல், உமாநாத், எஸ்.டி.பி.ஐ., நிர்வாகி வழக்கறிஞர் பக்ருதீன் மற்றும் அனைத்து அணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
நகர செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
தொடர்ந்து, வேட்பாளர் சந்திரகாசன், இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு கேட்டு, சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

