/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம்
/
பண்ருட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம்
பண்ருட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம்
பண்ருட்டியில் அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் செயல்வீரர்கள் கூட்டம்
ADDED : மார் 28, 2024 04:23 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் அ.தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு அ.தி.மு.க., கழக அமைப்பு செயலாளர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் சுதீஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
வேட்பாளர் சிவக்கொழுந்தை அறிமுகப்படுத்திஅ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சம்பத், சொரத்துார் ராஜேந்திரன், அருண்மொழித்தேவன் ஆகியோர் பேசினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்ரமணியன், சத்தியா பன்னீர்செல்வம், வெங்கடேசன், தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத், மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், நாகபூஷணம், சிவா, கோவிந்தராஜ், வினோத், பாஷியம், தமிழ்செல்வன், ராமசாமி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், இளைஞர், இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், அ.தி.மு.க, நகர செயலாளர்கள் கோவிந்தராஜ், பண்ருட்டி முருகன், காசிநாதன், அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், தெற்கு மாவட்ட பொருளாளர் தேவநாதன், ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் ஆறுமுகம், கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் குமார், அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூர்யமூர்த்தி, விருத்தாசலம் அருளழகன், வடலுார் நகர செயலாளர் பாபு, மேற்கு மாவட்ட துணை செயலாளர் ரவிசந்திரன், தே.மு.தி.க., துணை செயலர் பாலமுருகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

