/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை: பாண்டியன் எம்.எல்.ஏ., உறுதி
/
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை: பாண்டியன் எம்.எல்.ஏ., உறுதி
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை: பாண்டியன் எம்.எல்.ஏ., உறுதி
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை: பாண்டியன் எம்.எல்.ஏ., உறுதி
ADDED : ஏப் 03, 2024 03:21 AM

சிதம்பரம் : அ.தி.மு.க., வுக்கு ஓட்டளியுங்கள், கொள்ளிடத்தில் தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிதம்பரம் தொகுதியில் நிறைவேற்றப்படும் என, பாண்டியன் எம்.எல்.ஏ., பேசினார்.
சிதம்பரம் வர்த்தக சங்க பிரமுகர்களிடம், அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, தொகுதி பொறுப்பாளர், செம்மலை தலைமையில் ஓட்டு சேகரிக்கப்பட்டது. வர்த்தக சங்க கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சியில், வர்த்தக சங்க தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் அப்துல்ரியாஸ், சிவராமன் ஆதிமூலம் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., பேசுகையில், கொள்ளிடம் ஆற்றில் 2019 ல், அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம், கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்க கோரிக்கை வைத்ததும், 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, மண் பரிசோதனை துவங்கியது, கொரோனா பாதிப்பால், திட்டம் செயல்படுத்த முடியவில்லை. பினனர் தி.மு.க., ஆட்சி வந்தபின்பு, அத்திட்டம் கி டப்பில் போடப்பட்டது.
இது குறித்து கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் வலியுறுத்தினேன். துறை அமைச்சர் துரைமுருகன், 'டப்பு லேது' என கூறி கைவிரித்துவிட்டார்.
தி.மு.க., அரசு தடுப்பணை கொண்டு வரவில்லை என்றாலும், அடுத்த அ.தி.மு.க, ஆட்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார். .
அ.தி.மு.க,. நிர்வாகிகள் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, ராதாகிருஷ்ணன், ஞானம் பங்கேற்றனர்.

