/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் உறுதி

ADDED : ஏப் 04, 2024 12:50 AM

வடலுார்: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என, பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பேசினார்.
கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட, குறிஞ்சிப்பாடி அருகே சமட்டிக்குப்பம் கிராமத்தில் நேற்று காலை தேசிய ஜனநாயக கூட்டணி பா.ம.க., வேட்பாளர் தங்கர்பச்சான் பிரசாரத்தை கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில், என்.எல்.சி., நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன். கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து, மறு சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுப்பேன் என, உறுதி அளித்தார்.
தொடர்ந்து, புலியூர், திரட்டிகுப்பம், காட்டுப்பாளையம், மதனகோபாலபுரம், சத்திரம், கோரணப்பட்டு, பிள்ளைபாளையம், வெங்கடாம்பேட்டை, அன்னதானப்பேட்டை, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். கிராமங்களில் பெண்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
பா.ம.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் மோகன், ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், மணிவாசகம், வடிவழகன், பா.ஜ., நிர்வாகிகள் தங்கப்பன், மோகன், தவபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.