ADDED : மே 19, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் துறைமுகத்தில் மீன்பிடித்த மீனவர் ஆற்றில் தவறி விழுந்து இறந்தார்.
கடலுார் முதுநகர், சோனங்குப்பத்தைச் சேர்ந்தவர் கந்தன், 47; இவர், நேற்று மாலை பைபர் படகில் துறைமுகம் உப்பனாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென ஆற்றில் தவறி விழுந்து இறந்தார்.
கடலுார் துறைமுகம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

