/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருக்கை மீன் முள் குத்தி 6 பேர் படுகாயம்
/
திருக்கை மீன் முள் குத்தி 6 பேர் படுகாயம்
ADDED : ஆக 27, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : கடலுார், புதுச்சத்திரம் அருகே கடலில் குளித்தபோது, திருக்கை மீன்முள் குத்தி 6 பேர் படுகாய மடைந்தனர்.
கடலுார், புதுச்சத்திரம் அடுத்த சாமியார்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை கடற்கரை பகுதியில் குளித்தனர்.
அப்போது திருக்கை மீன் முள் குத்தியதில், கரைக்கு தப்பி வந்தனர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்வேந்தன், 28; அரவிந்தன், 25; காயத்ரி, 25; வசந்தா, 65; அப்பு, 23; சுபாஷ் சந்திரபோஸ், 25; ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.
உடன், 6 பேரும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

