/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அம்பேத்கர் சிலை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு குள்ளஞ்சாவடியில் 4 பேர் கைது

ADDED : ஏப் 25, 2024 04:08 AM

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கர் சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை மீது, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு, இரு பைக்குகளில் சென்ற சிலர் பெட்ரோல் குண்டு வீசினர்.
அது குறி தவறி அருகில் இருந்த பழைய ஊராட்சி கட்டடத்தின் மீது விழுந்து வெடித்தது.
சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
அதில் கிடைத்த தகவலின்பேரில் பெட்ரோல் குண்டு வீசிய அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 29; கிருஷ்ணகுமார், 21; விஜயராஜ், 22;, வெற்றிவேல், 23; ஆகிய 4 பேரை கைது செய்து நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை கண்டித்து, நேற்று காலை அம்பலவாணன்பேட்டை பகுதியில் வி.சி., கட்சியினர், கடலூர் துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.