/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 32,972 பேர் பங்கேற்பு
/
பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 32,972 பேர் பங்கேற்பு
பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 32,972 பேர் பங்கேற்பு
பத்தாம் வகுப்பு தேர்வு துவக்கம் மாவட்டத்தில் 32,972 பேர் பங்கேற்பு
ADDED : மார் 27, 2024 07:21 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று 26ம் தேதி துவங்கியது, வரும் ஏப்., 8ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 438 பள்ளிகளில் படிக்கும் 17,194 மாணவர்கள், 15,778 மாணவியர் என மொத்தம் 32,972 பேர் எழுதுகின்றனர். 7 தனித்தேர்வர்கள் மையங்கள் மூலம் 1,957 பேர் தேர்வு எழுதுகின்றனர். இத்தேற்விற்காக, 155 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 155 முதன்மை கண்காணிப்பாளர்கள், 161 துறை அலுவலர்கள், 24 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் மற்றும் 35 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2,631 அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படை மற்றும் நிலைப்படை உறுப்பினர்களாக 228 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதல் நாள் மொழி தேர்வான நேற்று காலை 10:00 மணியளவில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க 15 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 10:15 மணிக்கு விடைத்தாள் கொடுக்கப்பட்டதும், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.
ஆய்வு அலுவலர்கள் தலைமையிலான 228 உறுப்பினர்கள் கொண்ட நிலை படையினர் அனைத்து தேர்வு மையங்களிலும், ஆய்வு செய்தனர்.
கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

