/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 19 வேட்பாளர்கள் மோதல் களமிறங்கும் 11 சுயேச்சைகள்
/
கடலுாரில் 19 வேட்பாளர்கள் மோதல் களமிறங்கும் 11 சுயேச்சைகள்
கடலுாரில் 19 வேட்பாளர்கள் மோதல் களமிறங்கும் 11 சுயேச்சைகள்
கடலுாரில் 19 வேட்பாளர்கள் மோதல் களமிறங்கும் 11 சுயேச்சைகள்
ADDED : மார் 31, 2024 03:22 AM
கடலுார், : கடலுார் தொகுதியில், இறுதி வேட்பாளர் பட்டியலில் காங்.,- தே.மு.தி.க., -பா.ம.க., உள்ளிட்ட 19 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடலுார் தொகுதியில், 27ம் தேதியுடன் முடிந்த வேட்பு மனு தாக்கலில், 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 19 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நேற்று, வாபஸ் பெறும் நாளில் ஒருவர் கூட வாபஸ் பெறவில்லை. அதையடுத்து, 19 பேர் அடங்கிய இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு, சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்படி, அரசியல் கட்சி வேட்பாளர்களாக அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சிவக்கொழுந்து (முரசு). பகுஜன் சமாஜ் கட்சி தணிகைச்செல்வ(யானை), தி.மு.க., கூட்டணியில் காங்., விஷ்ணுபிரசாத் (கை), ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி அறிவுடைநம்பி (பலாப்பழம்), பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., தங்கர்பச்சான் (மாம்பழம்), நாம் தமிழர் கட்சி மணிவாசகன் (மைக்), வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி மாயக்கிருஷ்ணன் (சிறு உரலும் உலக்கையும்), தேசிய மக்கள் சக்தி கட்சி தங்கமுருகன் (வாளி) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சுயேட்சைகளாக ஆனந்தி (திராட்சை), ராஜமோகன் (வாயு சிலிண்டர்), ராஜசேகர் (கரும்பலகை), சக்கரவர்த்தி (ஊசி மற்றும் நுால்), சீனிவாசன் (கைவண்டி), தட்சிணாமூர்த்தி (தொலைக்காட்சிபெட்டி), தட்சிணாமூர்த்தி (அலமாரி), பாலாஜி (அழைப்புமணி), பிச்சமுத்து (கப்பல்), பிரகாஷ் (கணினி), ராமலிங்கம் (கண்ணாடி டம்ளர்) ஆகியோர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இதில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்பபட்ட அரசியல் கட்கள் 3, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 5, சுடே்சைகள் 11 பேர் என, தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள் அடங்குவர்.

