/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது: மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு
/
ஓட்டு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது: மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு
ஓட்டு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது: மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு
ஓட்டு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது: மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு
ADDED : ஏப் 11, 2024 04:22 AM

கடலுார்: கடலுாரில், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி துவங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. கடலுார் லோக்சபா தொகுதியில் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளது.
சட்டசபை தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஓட்டுச்சாவடி மையங்களை தயார்படுத்துவது, ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பு இடம், ஓட்டு எண்ணிக்கை மையம் உள்ளிட்டவை தயார்படுத்தப்பட்டு வருகிறது.
கடலுார் லோக்சபா தொகுதியில் ஓட்டுச்சாவடி மையங்களில் 3,616 பேலட் யூனிட், 1,808 கண்ட்ரோல் யூனிட், 1,956 வி.வி.பாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இரண்டாம் கட்ட பகுப்பாய்வு செய்யப்பட்டு, சட்டசபை வாரியாக ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி, 6 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று துவங்கியது. அதையொட்டி, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
பெல் நிறுவன இன்ஜினியர்கள் துணையுடன் தேர்தல் மண்டல அலுவலர்கள் பணியை மேற்கொண்டனர்.
கடலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டு இயந்திரங்கள் கடலுார் தாசில்தார் அலுவலகத்திலும், பண்ருட்டி தொகுதிக்கு பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்திலும், குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு, குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்திலும், நெய்வேலி தொகுதிக்கு மாவட்ட வருவாய் அலுவலகத்திலும், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளில் அந்தந்த தாலுகா அலுவகங்களிலும் இப்பணி நடந்தது.
இப்பணிகளை, கடலுார் மாவட்ட தேர்தல் அலுவலர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

