/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராணுவத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்
/
ராணுவத்தில் சேர 22 வரை விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 12, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;இந்திய ராணுவத்தில், 'அக்னிபத்' திட்டத்தில் சேருவதற்கு, வரும், 22ம் தேதி வரை, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என, கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
முதல்கட்டமாக, ஆன்லைன் வாயிலாக கம்ப்யூட்டரில் எழுத்துத்தேர்வு, இரண்டாம் கட்டமாக ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது.
விருப்பமுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத இளைஞர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

