/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் சுய உதவி குழு கண்காட்சியில்கருப்பட்டி, கடலை மிட்டாய், முந்திரி
/
மகளிர் சுய உதவி குழு கண்காட்சியில்கருப்பட்டி, கடலை மிட்டாய், முந்திரி
மகளிர் சுய உதவி குழு கண்காட்சியில்கருப்பட்டி, கடலை மிட்டாய், முந்திரி
மகளிர் சுய உதவி குழு கண்காட்சியில்கருப்பட்டி, கடலை மிட்டாய், முந்திரி
ADDED : டிச 27, 2025 05:11 AM

கோவை: கொடிசியா கண்காட்சி அரங்கில் நடந்துவரும் மகளிர் சுய உதவி குழு கண்காட்சியில் கருப்பட்டி, கடலை மிட்டாய், பனைஓலை பொருட்கள் என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கேற்ப பிரத்யேக பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிப்பு அறிமுகம் செய்யும் சாரஸ்-2025 மதி கண்காட்சி கொடிசியா ' டி' அரங்கில் தமிழக அரசு சார்பில் நடந்து வருகிறது.
அதில் 10 மாநிலங்கள் சார்பிலும், தமிழக மாவட்டங்களின் மகளிர் குழுக்களை சேர்ந்த 113 அரங்குகளும், பிற துறைகள் சார்பில் 10 அரங்குகளும் ஆக 172 அரங்குகள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தயாரிக்கப்படும் பிரத்யேக பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆரணி பட்டு ரகங்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், கண்ணாடி ஓவியங்கள், பத்தமடை மதிப்புக்கூட்டு பொருட்கள், ராமநாதபுரம் பனை ஓலை பொருட்கள், திருப்பூர் காட்டன் ஆடைகள், சிவகங்கை செட்டிநாடு காட்டன் ஆடைகள் தவிர அரியலுார் கடலுார் முந்திரி, கோவில்பட்டி கடலைமிட்டாய், உடன்குடி கருப்பட்டி, நாமக்கல் கொல்லிமலை மிளகு உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சியில் பங்கேற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் சந்தைப்படுத்தும் உத்திகளை மேலும் வலுப்படுத்த காலை 11:30 முதல் 1:30 மணி வரை பல்வேறு தலைப்புகளில் வல்லுனர்கள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படுகிறது. கண்காட்சி வரும் ஜன.,1 ம் தேதி வரை நடக்கிறது.

