/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூடப்படும் நிலையில் மூன்று அரசு துவக்க பள்ளிகள் சேர்க்கை :அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
/
மூடப்படும் நிலையில் மூன்று அரசு துவக்க பள்ளிகள் சேர்க்கை :அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மூடப்படும் நிலையில் மூன்று அரசு துவக்க பள்ளிகள் சேர்க்கை :அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
மூடப்படும் நிலையில் மூன்று அரசு துவக்க பள்ளிகள் சேர்க்கை :அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : பிப் 06, 2024 10:12 PM
அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், மூன்று துவக்க பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டும் மாணவர்கள் படிப்பதால் மூடப்படும் நிலையில் உள்ளன.
அன்னுார் ஒன்றியத்தில் 72 அரசு துவக்க பள்ளிகள், மூன்று உதவி பெறும் துவக்க பள்ளிகள், 16 நடுநிலைப் பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள், ஐந்து அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஒரு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளன.
அரசு பள்ளிகளில் போதுமான கட்டமைப்பு வசதி இல்லாதது, அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அன்னுார் வட்டாரத்தில் உள்ள 75 துவக்கப் பள்ளிகளில் மூன்று பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ளது.
அன்னுார் பேரூராட்சி பகுதியில் உள்ள காக்காபாளையம் துவக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் மட்டும் ஒரே ஒரு மாணவர் படித்து வருகிறார். இந்த ஏப்ரல் மாதம் அந்த மாணவர் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்நிலைப் பள்ளிக்கு சென்று விட்டால் இப்பள்ளியில் புதிதாக யாராவது சேர்ந்தால் மட்டுமே பள்ளி இயங்கும். இல்லாவிட்டால் ஆசிரியர் மட்டுமே பள்ளியில் இருக்கக்கூடிய நிலை ஏற்படும்.
இதே போல் வடவள்ளி ஊராட்சியை சேர்ந்த முகாசி செம்சம்பட்டி, அல்லப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோனார்பாளையம் ஆகிய இரு பள்ளிகளிலும் தலா ஆறு மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், 'மாணவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளதால் இப்பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றார். மேலும் மதியம் சத்துணவு, காலை சிற்றுண்டி ஆகியவை இங்கு சமைக்கப்படுவதில்லை. வேறு பள்ளியில் இருந்து சைக்கிள் அல்லது மொபட்டில் கொண்டு வந்து தருகின்றனர்.
அரசு காலை சிற்றுண்டியை காலை 8:50 மணிக்குள் மாணவர்களுக்கு வழங்கி விட வேண்டும். 9 :10 மணிக்கு பிரேயர் துவக்க வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால் வேறு பள்ளியிலிருந்து காலை சிற்றுண்டி கொண்டு வருவதற்கு தாமதமாவதால் ஒன்பது மணிக்கு தான் சிற்றுண்டி வந்து சேர்கிறது. அதன் பிறகு ஆசிரியர் பரிசோதித்துப் பார்த்து அதன் பிறகு மாணவர்களுக்கு வழங்க வேண்டி உள்ளது. தாமதமாக பள்ளி துவங்க வேண்டி உள்ளது.
மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக ஒற்றை இலக்கத்தில் உள்ள பள்ளிகளிலும் அதே ஊரிலேயே காலைச் சிற்றுண்டி மற்றும் மதியம் சத்துணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

